இலங்கையை மடக்க அமெரிக்கா கடும் நடவடிக்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹமில்டன் ரிசேர்வ் வங்கி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டுக் கடன்களை தற்காலிகமாக செலுத்த முடியாது என இலங்கை மத்திய வங்கி அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே ஹமில்டன் ரிசேர்வ் வங்கி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
பிணை முறி கொடுக்கல் வாங்கல்
இலங்கையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொண்டுள்ள ஹமில்டன் வங்கியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த பிணை முறிகளின் 5.875 சதவீதத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
குறித்த பிணை முறிகளின் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களே காரணம்
செயின்ட் கிட்ஸ் நெவிசினை தலைமையகமாக கொண்ட ஹமில்டன் ரிசேர்வ் வங்கி, இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட அதன் உயர் அதிகாரிகளே காரணம் என தனது மனுவில் தெரிவித்துள்ளது.
