தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன்

M. A. Sumanthiran P Ariyanethran ITAK Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 23, 2024 08:51 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட அரியநேத்திரன் (Ariyanethiran) தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுமந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன், இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் கைகோர்க்கும் ரணில் - சஜித்: நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய அடுத்த நகர்வு

மீண்டும் கைகோர்க்கும் ரணில் - சஜித்: நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய அடுத்த நகர்வு


எதிர்ப்புக்கான காரணம்

மேலும் அந்த அறிக்கையில், "2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான பொழுதிலிருந்தே அதனை மிகக் கடுமையாக நான் எதிர்த்தது அனைவரும் அறிந்ததே.

தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன் | Sri Lanka Tamil Candidate Itak Sumanthiran Issue

அவ்வெதிர்ப்புக்கான காரணங்கள் பல தருணங்களிலே வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இச் சமயத்திலே மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன்.

  1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.
  2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன?
  3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும்.
  4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
  5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது.
  6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

அரியநேத்திரனுக்கு ஆதரவு

இலங்கை தமிழரசுக்கட்சி எத்தருணத்திலும் தமிழ்ப் போதுவேட்பாளரை நிறுத்துகிற முயற்சியில் பங்கெடுக்கவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்கள் மூவரோடும் கட்சியின் முடிவின் படி உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன் | Sri Lanka Tamil Candidate Itak Sumanthiran Issue

எமது கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்திய போது அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து, அவருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யும் எமதுகட்சி உறுப்பினர்களை எச்சரித்தோம்.

பிரதான வேட்பாளர்கள் மூவரினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்தவுடனேயே எமது மத்திய செயற்குழு கூடி அவற்றை ஆராய்ந்தது.

இந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்த ஐந்தாவது கூட்டம் 01.09.2024 அன்று வவுனியாவில் கூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

  1.  தமிழ்ப் பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பா. அரியநேத்திரனுக்கு நாம் ஆதரவளிப்பதில்லை.
  2.  தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அரியநேத்திரனைக் கோருவது.
  3. ஜனாதிபதி தேர்தல் 2024 இல் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது. எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார்.

வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 % இனர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இதுஎமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் மாறாக அரியநேத்திரனுக்கு வடக்குகிழக்கில் 14 % இற்கு குறைவாகவே வாக்குகள்கிடைத்துள்ளன.

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு


விபரீத விளையாட்டு

மிகக் குறைவான அளவு வாக்குகளைப்பெற்றதன் மூலமும், பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு மறுக்கப்பட்ட நிலையிலும், அரியநேத்திரனின் படுதோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பியிருக்கின்றது.

தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன் | Sri Lanka Tamil Candidate Itak Sumanthiran Issue

1982 ஆம் ஆண்டு திரு.குமார் பொன்னம்பலம் 2.67% வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69% வாக்குகளையேபெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.''என்றுள்ளது. 

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி