மட்டக்களப்பில் தமிழினத்தின் சாபக்கேடாக மாறிய பத்து பதினைந்து பேர்
மட்டக்களப்பு காந்தி பூங்காவில ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு...
என்ன விஷயம் எண்டா, இலங்கையில நடந்தது இனப்படுகொலையாம் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொல்லிட்டாராம், அது பிழையாம் எண்டும் அதை தாங்கள் எதிர்கினமாம் என்றும் பத்து பதினைந்து பேர் சேர்ந்து கறுப்பு கொடியும் பிடிச்சு கொண்டு, யாரோ எழுதிக் குடுத்த வாசகங்களையும் கையில வச்சு கொண்டு நிண்டிருக்கினம்...
இலங்கையில நடந்தது இனப்படுகொலை என்று தமிழருக்கு சார்பாக ஒரு சர்வதேச குரல் ஒலித்திருக்கு என்று ஒட்டுமொத்த தமிழரும் சந்தோசப்படும் போது, இதுக்கு எதிரா வந்து கொடி பிடிச்சுக்கொண்டு நிக்கினமே யார் இந்த பத்து பேரும் இவயளுக்கு பின்னுக்கு அல்லது முன்னுக்கு நிக்கிறது யார் எண்டு மட்டக்களப்பு சனத்திட்ட கேட்டா, எல்லாரும் அரச கூலிப்படையாம் எண்டு சனம் சொல்லுது...
விளங்கேலையே, அதுதான் சிறிலங்கா புலனாய்வாளர்களிட்ட இருந்து மாதாந்த சம்பளம் வாங்கி செயற்படுற ஒரு சில புள்ளிகளாலையும் அவர்களின் குடும்பத்தினராலையும் தான் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கு.
அதாவது, ஏறாவூர சொந்த இடமா கொண்ட ஒரு காவல்துறை உத்தியோகத்தர், றெஜிகோல் வீதி கிரான்ல இருக்கிற ஒருவர் என்று இப்படி ஒரு சிலர் தான் முன்னுக்கு நின்று அரசுக்கு விசுவாசமா கடுமையா உழைக்கினம்..
இப்ப என்னெண்டா, "கனடா பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய தமிழ் மக்கள்" எண்டு உலகத்துக்கு காட்டப்போகினமாம்....அதுதான் விசயம்.
அட கடவுளே, மட்டக்களப்பில இப்படியும் சனமோ எண்டு நினைச்சுக்கொண்டு என்னும் கொஞ்சம் கூட விசாரிச்சா...இராணுவமும், புலனாய்வுப்பிரிவும், இவர்களுக்கு ஒத்து ஊதி அதில வயிற்றுப்பிழைப்பு நடத்துற ஒரு சில ஆக்களும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரா இன்னமும் பாரிய நிகழ்ச்சி நிரல்ல பயணிக்கிறது தெரிய வந்திச்சு.
என்ன எண்டா, விடுதலை புலிகளால கொல்லப்பட்டவர்களுக்கு என்று ஒரு நினைவு தூபி திறக்கவும் அதை முஸ்லிம் மக்களை வச்சு திறக்கவும் இந்த குழு ஏற்பாடு செய்து வருகுதாம்..
எப்படியாச்சும் வடக்கு - கிழக்கு மக்களை பிரிச்சு வச்சிருக்கணும் இல்லையெண்டா தமிழ் முஸ்லீம் பிளவை எண்டாலும் ஏற்படுத்திவிட்டிடனும் அதுக்கு தான் இவ்வளவும்..
இதேபோல தான் கடந்த காலத்திலையும் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில விரிசல் ஏற்படுத்திறத்துக்கு பல சதி செயல்கள் நடந்திருக்கு, இதில சிக்கி பலியாகி போன அப்பாவி சனத்துக்கு கடைசிமட்டும் தங்களை ஒரு பகடைகாயா பாவிச்சிட்டாங்கள் என்று தெரியாமலே போட்டுது.
அப்படியிருக்கும் போது, இண்டைக்கு நடந்த போராட்டமும், தூபி அமைப்பு திட்டமும் இவ்வாறு இனங்களுக்கு இடையில பிளவு ஏற்படுத்துவதற்க்கான ஒரு செயல் தான் என்று மட்டக்களப்பு வாழ் மக்கள் தெரிவிச்சிருக்கினம்...