இலங்கை நிறுவனமொன்றிற்காக போட்டியிடும் இந்தியா மற்றும் சீனா
சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
சீனாவின் Gotune International Investment Holdings மற்றும் இந்தியாவின் Jio Platforms ஆகிய இரண்டு நிறுவனங்களுமே சிறிலங்கா ரெலிகொம் நிறுவன பங்குகளை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன.
50.23% பங்குகள்
இந்நிலையில், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23% பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் ஆகியவை ரெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்துள்ளன.
தகுதி பெற்ற போட்டி நிறுவனங்கள்
எவ்வாறாயினும், நிதி அமைச்சகத்தின் சிறப்பு திட்டக் குழுவும், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் குழுவும், ரெலிகாம் பங்குகளை வாங்குவதற்கு முன் தகுதி பெற்ற போட்டி நிறுவனங்களாக ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தையும், சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |