அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று : ஆபத்தான நிலை தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறப்புகளை குறைப்பதிலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டெங்கு இறப்பு வீதம் ஆயிரம் நோயாளர்களுக்கு ஆறு பேர் எனவும், ஆசிய பிராந்தியத்தின் டெங்கு இறப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இறப்புகளை குறைப்பதில் இது மிகவும் நல்லதொரு நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
டெங்கு நோய்
உலகில் சுமார் 5 மில்லியன் மக்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது என வைத்தியர் மஹிபால ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு நோயைக் குறைக்க பல்நோக்கு அணுகுமுறை தேவை எனவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வரித்துறை அமைச்சு தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |