மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை!
இலங்கையில் இன்று முதல் லாப் சமையல் எரிவாயுவின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம அறிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரியின் நடைமுறை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள்
இதன்படி, 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4 ஆயிரத்து 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும் : நிதி இராஜாங்க அமைச்சர்
அத்துடன், 5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 900 ரூபாவாக அதன் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
இதேவேளை, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (1) 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதோடு, 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
மேலும், பெறுமதி சேர் வரியின் நடைமுறை காரணமாக இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் வகையில் பல பொருட்களினதும் சேவைகளினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |