2024இல் மேலும் மூன்று ராணுவ உளவு செயற்கைகோள் : வடகொரியாவின் திட்டம்
2024ஆம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தநிலையில். எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும் : நிதி இராஜாங்க அமைச்சர்
ஐ.நா. தடை
எனவே நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்ப வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.
ஆனால் அதனை பொருட்படுத்தாத வடகொரியா கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
கூட்டுப்போர் பயிற்சி
எனவே வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகின்றன.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.
இதனால் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ நகர்வுகளை கண்காணிக்க உளவு செயற்கைகோள்களை வடகொரியா அனுப்பியது. இதற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |