கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம் - தென் கொரியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா
வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில், ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா தென் கொரியாவிற்கு ஆதரவினை வழங்கும் முகமாக, சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் , அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கும் போர் பதற்றங்கள்
அத்துடன், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்க்கொள்ளும் செயற்பாடு கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றங்களை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.