சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு!
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த மாநாட்டுக்கான அழைப்பு தனித்தனியாக அனைத்து கட்சிகளுக்கும் கிடைக்கப்பெற்றதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த மாநாட்டில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று மாலை தீர்மானிக்கவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளி கட்சியான புளொட் அறிவித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
