இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்போம் : ஐ.தே.க சூளுரை
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக ஐ.தே.க மாற்றியமைக்கும். அதிபர் ரணில் விக்ரமசிங்க அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்‘‘ என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஸ்மார்ட் இலங்கை
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2048ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
''இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது என்பது வெறும் அறிக்கையல்ல. மாறாக விடாமுயற்சியுடன் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
2048ஆம் ஆண்டளவில் இலங்கையானது ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வகுக்கப்பட்ட திட்டத்திற்கமைய இலங்கை ஸ்மார்ட் நாடாக மாற்றப்படும்” - என்றார்.