திருகோணமலையை உலுக்கிய கோரம்! மூவர் பலி - 17 பேர் படுகாயம்
Sri Lanka Police
Trincomalee
Accident
By Vanan
குடைசாய்ந்த உழவியந்திரம்
திருகோணமலை - பச்சனூர் பகுதியில் உழவியந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கல்கந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையின் சிரமதான பணிகளுக்காக, சேருவில பகுதியில் இருந்து 22 பேர் உழவு வண்டியில் சென்றுள்ளனர்.
சாரதி உட்பட 17 பேர் படுகாயம்

குறித்த உழவியந்திரம் பச்சனூர் பகுதியில் சென்றவேளை குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூவர் பலியானதுடன், உழவியந்திர சாரதி உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மூதூர் காவல்துறை விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி