இந்த மாதத்தில் இதுவரை வந்த சுற்றுலாப்பயணிகள்!
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது செப்டம்பர் மாதத்தின் முதல் பதினொரு நாட்களில் 10,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி, செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 10,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்திற்கான தினசரி வருகை விகிதம் ஒரு நாளைக்கு 979 சுற்றுலாப் பயணிகளாகும் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 5 இலட்சத்து 7 ஆயிரத்து 226 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தியா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், ஜூலை மாதத்தில், 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் ஓகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்து 37,760 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
