நீங்களும் சுற்றுலா விரும்பியா : இதோ இலங்கையில் இருக்கும் கண்கவர் இடங்கள்
இலங்கையை பொருத்தமட்டில் தேயிலைக்கு பிறகு வருமானம் ஈட்டும் தொழிற்துறையாக சுற்றுலா துறை காணப்படுகிறது.
பொதுவாக இலங்கை போன்ற நாடுகள் இயற்கை அழகினால் நிரம்பியிருக்கும். இதன் காரணமாக தான் இங்கு ஒரு வருடத்திற்கு அளவிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் இயற்கையுடன் கூடிய ஒரு பயணம் வேண்டும் என்றால் எந்தவிதமான தயக்கமும் இன்றி இலங்கையை தெரிவு செய்யலாம்.
இலங்கையில் இருக்கும் சில இடங்கள் மனித தலையீடு இல்லாமல் கவர்ச்சியாக இருக்கும். அவ்வாறான சுற்றுலா தளங்கள் குறித்து இப்பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்வோம்.
நுவரெலியா
இலங்கையில் இருக்கும் குளிரான பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு தேனிலவு, குடும்ப பயணங்கள், கல்வி சுற்றுலாக்கள் அதிகமாக வருவார்கள்.
அத்துடன் கிரிகோரி ஏரி, விக்டோரியா பார்க், பழைய தபால் அலுவலகம், மூன் பிளாசா, செயின்ட் கிளெய்ர் நீர்வீழ்ச்சி, ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அம்பேவெல பண்ணை என ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.
எல்ல
இந்த இடமும் பார்ப்பதற்கு நுவரெலியா போல் தான் இருக்கும். நுவரெலியாவை விட இங்கு குளிர் சற்று குறைவாக இருக்கும்.
அத்துடன் பல்லென்கெட்டு நீர்வீழ்ச்சி, நைன் ஆர்ச் என்ற வளைந்த பாலம், ஜெட் வடிவ ரயில் பாதை ஆகிய இடங்கள் இருக்கின்றன.
பார்ப்பதற்கு குட்டி நகரம் போல் இருந்தாலும் சுற்றுலா பயணிகளுக்கான அத்தனை வசதிகளும் இங்கு இருக்கின்றன.
தெனியாய
குளிர்ந்த காலநிலையில் தெனியாய“லிட்டில் நுவரெலியா” என அழைக்கப்படுகிறது.
இந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு செல்ல வேண்டும் என்றால் மாத்தளையிலிருந்து சரியாக 2 மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டும்.