இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் : எட்டு மாதங்களில் ஈட்டப்பட்டுள்ள பாரிய வருமானம்!
2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை (Sri Lanka) இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை (USD) ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய (CBSL) தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 50.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறை அதிகாரிகள்
அத்துடன், ஓகஸ்ட் 2024 இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை, 164,609 ஆக இருந்ததுடன் இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கியின் தரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |