பல உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலையின் ஆறா வடுக்கள்!
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகியள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின அனுஷ்டானங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள்
அதுமட்டுமன்றி பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டும், மக்களின் மனங்களில் ஆறாத ரணமாய் படிந்த ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன.
இந்த நிகழ்வில் உயிரிழந்வர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அஞ்சலி நிகழ்வு
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மதத்தலைவர்களின் பிரார்த்தனை
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மத தலைவர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

















ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
