அமெரிக்காவுக்கு கடிதம் எழுதியது ஸ்ரீலங்கா
அமெரிக்காவுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அமெரிக்க சுதந்திரத்திற்கு தினேஷ் குணவர்தன தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவு மற்றும் உதவிக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி, தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அளவுகள் நன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தினேஷ் குணவர்த்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 8 மணி நேரம் முன்