இலஞ்சம் வாங்கி கிராம வளத்தை சூறையாடாதே - எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள்!
வவுனியா நாம்பன்குளத்தில் தொடர்ச்சியாக கிரவல் எனப்படும் குறுணிக்கற்கள் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா நாம்பன்குளத்தில் குறுணிக்கற்கள் அகழப்படுவதனால் மக்கள் அசெளகரியத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து இன்று காலை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமது கிராம வளத்தை சூரையாடாதே, பிரதேச செயலாளரே மக்களின் வாழ்வை சீரழிக்காதே என தெரிவிக்கும் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராமத்தவர்கள்
இதனையடுத்து குறுணிக்கற்கள் அகழும் பகுதிக்கு சென்ற கிராமத்தவர்கள் குறுணிக்கற்கள் அகழப்பட்ட இடங்களையும் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கிராமத்தவர்கள்,
“பிரதேச செயலாளரிடம் நாங்கள் சென்றால் எங்கள் சார்பாக அவர் எதனையும் கதைப்பதில்லை. தனக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் வருகின்றது அதனால் தான் எதனையும் செய்ய முடியாது என்கின்றார்.
ஆபத்தான பிரதேசம்
இதற்கு முழு காரணம் பிரதேச செயலாளரும் மாவட்ட செயலக அதிகாரிகளுமே. இலஞ்சம் வேண்டியே இவற்றை செய்கின்றனர். நாங்கள் சென்றால் நிறுத்துவதாக தெரிவிக்கும் பிரதேச செயலாளர் மறுநாள் கிரவல் வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கின்றார்.
அரசியல்வாதிகளும் இந்நிலைக்கு காரணம். மலசலகூடமெல்லாம் நீர் நிரம்புகின்றது. கிணறுகள் நீர் கூடாமல் போகின்றது. கிரவல் கிடங்கில் நீர் நிரம்பி நிற்பதால் சிறு பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்க பயமாக உள்ளது” எனவும் தெரிவித்தார்கள்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
