இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் : வெளியான தகவல்!
இலங்கைக்கு கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 5 ஆயிரத்து 300 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பேருந்துகள், பயணிகள் வான்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதி
அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுமார் 4 ஆயிரத்து 193 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும், கடந்த 2022 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதிக்குள் 10 ஆயிரத்து 17 மோட்டார் சைக்கிள்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
குறைவடைந்துள்ள இறக்குமதி
இதன்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 596 மகிழுந்துகள், 380 பேருந்துகள் மற்றும் பயணிகள் வான்கள், 34 முச்சக்கர வண்டிகள், 92 சரக்கு வாகனங்கள் மற்றும் 5 தரைவழி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |