கொந்தளிக்கும் அரசியல்வாதிகள் - கையை விரித்தார் சவேந்திர சில்வா
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் காவல்துறை மா அதிபரும் இராணுவத் தளபதியும் தமது சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது காவல்துறையினருக்குரிய விடயம் என்பதை அறிந்த அரச தலைவர், காவல்துறை மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.
எப்படியிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமது சொத்துக்களை பாதுகாக்க தவறிய இராணுவ தளபதியும் பதவி விலக வேண்டும் என கோரியுள்ளனர்.
இதன்போது இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரச தலைவர் பேசியுள்ளார்.
எப்படியிருப்பினும் இவ்வாறான விடயத்தில் தலையிடுவதற்கு இராணுவத்திற்கு சட்டரீதியாக அனுமதி இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
