நிலவும் சீரற்ற காலநிலை : யாழில் 26 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (05.05.2025) நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 08 குடும்பங்களைச் சேர்ந்த சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/203 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேர் மின்னல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்று
ஜே/191 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 141 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுளள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் ஜே/ 150 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே / 180 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





