இலங்கைக்கு மீன்களும் இறக்குமதி செய்யப்படலாம் : அமைச்சர் அறிவிப்பு
இலங்கைக்கு எதிர்காலத்தில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
மீன் உற்பத்தியில் பின்னடைவு
உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொள்ளைககளின் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தவர்கள் தற்பொழுது பொருளாதாரம் பற்றி எம்மிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் எந்த பயனுமில்லை. இந்த யதார்த்தம் கசப்பானது என்றாலும் அதனை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |