இலங்கை வங்குரோத்து நிலைக்கு செல்லாது - அரசாங்கம் திட்டவட்டம்
சஜித் பிரேமதாச மற்றும் திஸாநாயக்க நினைப்பது போல் எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டோம். எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தித்து இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்கிறார் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando).
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், டொலர் பிரச்சினை தற்காலிக பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று கூறுகிறீர்கள். ஆனால் மக்கள் மிகவும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர். எல்லாவற்றிற்கும் வரிசை யுகம் உருவாகுமா? என செய்தியாளர் எழுப்பியய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“கொவிட் நெருக்கடி முடிந்தாலும் இந்த வரிசை யுகம் முன்னைய அரசாங்க காலத்திலும் காணப்பட்டது.
எண்ணெய் பவுசர் வரும்வரை நம் நாட்டு மக்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. எரிவாயு பெற வரிசைகள் இருந்தன.
சவால் இருக்கிறது என்பது அறிவாளிகளுக்குத் தெரியும். வெளிநாட்டில் இருந்து வந்த பணம் வழக்கம் போல் வரவில்லை.
வரக்கூடிய பணத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இல்லையெனில் இதுபோன்ற சவால்களை சந்திக்க மாட்டோம்” என்றார்.