அரசியல்வாதிகளை சல்லி காசுக்கும் நம்ப முடியாது- ஆவேசமான முருத்தெட்டுவே!
அரசியல்வாதிகள் எவரையும் சல்லி காசுக்கும் நம்ப முடியாது என கொழும்பு பல்லைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினரிடம், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என தான் அன்று கோரிய போதிலும் அவர்கள் அந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் அரசியல்வாதிகள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு சாதகமாக பேசக் கூடிய இனத்தவர்கள். 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஆதரவாக கைகளை உயர்த்த வேண்டாம் என வீரவன்ச உள்ளிட்டோரிடம் கோரினோம்.
எனினும் அவர்கள் ஆதரித்து கைகளை உயர்த்தினர். தவறிய இடத்தை பற்றி தற்போது வந்து பேசுகின்றனர். இதனால், அரசியல்வாதிகளை சல்லி காசுக்கும் நம்பக் கூடாது என்பதே எனது நம்பிக்கை எனவும் தேரர் கூறியுள்ளார்.
