திரைப்பட தயாரிப்புக்காக பத்மேவுக்கு அழைப்பு விடுத்த தென்னிலங்கை நடிகை!
துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் அறிமுகமான தென்னிலங்கை நடிகையொருவர், பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவை திரைப்பட தயாரிப்பில் இணைந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த உரையாடல் தொடர்பாக கெஹல்பத்தர பத்மேவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தீவிரம்
தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், துபாயில் கெஹெல்பத்தர பத்மே , தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையை சேர்ந்த நடிகைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் தென்னிலங்கை நடிகைகள் பலரும் தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மேவின் கருப்புப் பணம் குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 8 மணி நேரம் முன்