இந்திய கடற்பரப்பில் நடமாடிய இலங்கைப் படகு - காவல்துறையின் கண்ணில் மண் தூவி தப்பியோட்டம்
இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்திய காவல்துறையினர் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற படகு
இதன்படி காவல்துறையினர் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் இருந்தனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன எனவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்திய காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9