பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை
இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை
பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் அடையாளம் தெரியாத ஆயுததாரியால் நடுவீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் Cotabato நகரத்தில் இன்று (வியாழன்) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோ மாநிலத்தில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை தொழிலதிபரான மொஹமத் ரிஃபார்து மொஹமத் சித்தீக் (46 வயது) (Mohamed Rifard Mohamed Siddeek) என அடையாளம் காணப்பட்டார் என Cotabato City காவல் நிலைய கொமாண்டரான கப்டன் Kenneth Rosales தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதாக, கோடாபாடோ நகர காவல்துறை பணிப்பாளர் Colonel Querubin Manalang Jr தெரிவித்துள்ளார்.
சித்தீக் தனது வெள்ளை மினி வானில் பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ருஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக வந்து இறங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவம்
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் நடந்த இடத்தில் caliber 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக காவல்துறையினரின் விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட தொழிலதிபரை அறிந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தீக் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு Datu Odin Sinsuat நகரின் Barangay Broce என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தனர்.