கப்பலை கொண்டுவர சென்ற 09 இலங்கையர், அமெரிக்காவில் தலைமறைவு
Sri Lanka
United States of America
Sri Lanka Navy
By Sumithiran
கப்பலை கொண்டுவர சென்ற இலங்கையர்
இலங்கைக்கு வழங்கப்பட்ட கப்பலை கொண்டுவருவதற்காக அமெரிக்கா சென்ற இலங்கையர்களில் ஒன்பது பேர் அங்கு தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடையாக கரையோர பாதுகாப்பு கப்பல் ஒன்றை வழங்கியுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட கப்பலை கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர் .
அமெரிக்காவில் தலைமறைவு
இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்தக்குழுவில் சென்ற ஒன்பது பேர் அமெரிக்காவில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
