பதவிக்காக இன முறுகலை தூண்டவுள்ள அரசியல்வாதிகள்! ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த பாட்டலி
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
இலங்கையில் அதிபர்த் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத இன மோதல்கள் தலைதூக்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பௌத்த இஸ்லாமிய மோதல்
அந்தவகையில், முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும் பௌத்த இஸ்லாமிய அடிப்படையில் மோதலை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே தேர்தலின் போது இன மதப் பிளவுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி