பாரிய நிதி நெருக்கடி -வெளிநாடுகளில் உள்ள தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்படாத சம்பளம்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் நிதியை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கி வருகிறது.
நிதியின்மை காரணமாக நாட்டில் மருந்து பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அரச வைத்தியசாலைகளில் முக்கிய மருந்துகள் இல்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மாணவர்களுக்கு போசாக்கின்மை அதிகரித்து வருிகிறது.வானளாவ உயர்ந்து வரும் விலை அதிகரிப்பினால் பெற்றோர் பிள்ளைகளுக்கு சத்தான உணவை வாங்கி கொடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அரச ஊழியர்களுக்கான சம்பளம்
இந்த நிலையில் அரசாங்கம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதிலும் பெரும் இடர்பாடுகளை சந்தித்தே வருிகிறது.அளவுக்கதிகமான பண அச்சிடுதல் நாட்டில் பாரிய பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒருகட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பொதுவாக 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தூதரகங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் அரசு இதுவரை பணம் அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல தூதரகங்களை அரசு மூடியதும் குறிப்பிடத்தக்கது.
