சிறிலங்கா அரசாங்கத்தின் தோல்விகளிற்கு உக்ரைன் நெருக்கடி காரணமா? எதிர்க்கட்சி காட்டம்
government
ukraine
fuel
Gayantha Karunatilleka
By Thavathevan
சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க தயாரில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவை காரணம் காட்டியது, இனிவரும் அடுத்த மூன்று வருடங்களில் நடைபெறப்போகின்ற தவறுகள் மற்றும் பிழைகளிற்கு அரசாங்கம் உக்ரைன் நெருக்கடியை காரணம் காட்டும்.
இந்த நிலையில், நாட்டை நிர்வகிப்பவர்கள் தங்கள் திறமையின்மைக்காக ஏனைய அதிகாரிகளைக் குறை கூறி வருகின்றனர்.
மின்சாரம் தடைப்பட்டால் மின்சார சபையின் தலைவரையும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரையுமே குறை கூறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
