அரசு வருமானத்தில் அதிரடி உயர்வு: 11 மாதங்களில் பில்லியன் ரூபாய்...!
2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கை சுங்கத்தின் ஊடாக 2223 பில்லியன் ரூபாய் வருமானமும் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2105 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.
அரச வருமானம்
அத்தோடு, மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாவும் மற்றும் ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாவும் வருமானமாக பெறப்பட்டுள்ளது.
2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதியின் ஊடாக 54.6 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டிருந்தது.
அத்தோடு 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த அரச வருமானம் 35.5 வீதத்தினால் அதிகரித்து 4,945.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 3,650.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கரீபியன் கடற்பரப்பில் போர் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பின் மதுரோவின் அதிரடி அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |