ஐ. நா பரிந்துரைகளை கண்டுகொள்ளாத சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தராதரத்தை பூர்த்தி செய்யும் வகையில் காணப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
சர்வதேச சட்டங்களை மீறல்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்களை மீறுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்களும் சர்வதேச அமைப்புகளும் பல வருடங்களாக சுட்டிக்காட்டி வந்தன.
இந்தப் பின்னணியில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கு தீர்வு வழங்கப்படுவதை காணக் கூடியதாக இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் விரிவாக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்கள் மற்றும் தொலைத் தொடர்புகளை இடைமறிப்பதில் குறைவான நீதித்துறையின் மேற்பார்வை ஆகிய விடயங்கள் கவலையளிப்பதாகவும் ஐ.நா நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS