வடக்கு தமிழ் மக்களுக்கு போராபத்து: அரசாங்க வசமாகப்போகும் நினைவேந்தும் துயிலுமில்லங்கள்!
வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசு தொடர் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
தொல்லியல் திணைக்கள கையகப்படுத்தல்கள் , வன இலாகாவின் எல்லையிடும் பணிகள், மத தலங்களின் ஆக்கிரமிப்பு , இராணுவ முகாம்கள் என தமிழ்மக்களின் நிலம் தொடர்ச்சியாக சூறையாடப்பட்டு வரும் நிலையில்,
கடந்த மார்ச் மாதம் 28 ம் திகதி வெளியான 24/10 ம் இலக்க வர்தமானி அறிவித்தலின் படி வடக்கில் தமிழ் மக்களின் 5941 ஏக்கர் நிலப்பகுதியை சுவீகரிக்க தீர்மானித்திருப்பதான அறிவித்தல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் இவ்வளவு பரப்பை என்ன காரணத்திற்காக சுவீகரீக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை இப்படித்தான் ஒரு காலத்தில் கிழக்கில் மக்களின் நிலங்களை சூவிகரித்து .
D.S சேனாநாயக்கா சிங்கள மக்களை குடியேற்றி கிழக்கின் அம்பாறையை சிங்களமயமாக்கியது போல வடக்கிலும் இப்படியான ஒரு திட்டத்தை மேற்கொள்ள முனைகிறது அரசு.
அதிலும் குறிப்பாக தமிழர்களின் நினைவேந்தல் உருமக்களை காலம் காலமாக நிராகரித்து வரும் சிங்களத்தரப்பு இம்முறை அவர்கள் நினைவேந்தும் துயிலுமில்லங்களையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றமும் கூட இந்த சுவீகரிப்புக்குள் சிக்குண்டு போகும் அவலம் விரைவில் அரங்கேற்றப்படலாம்.
இந்த விவகாரம் தொடர்பில் இதன் மூலம் வடக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் பேராபத்து தொடர்பில் முழுமையான ஆராய்வுகளை செய்கிறது IBC தமிழின் இன்றைய அதிர்வு.
