இன்று இரவு சிறப்பு விமானத்தில் இஸ்ரேல் பறக்கவுள்ள இலங்கையர்கள்
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மேலும் 211 இலங்கையர்கள் இன்று (12/27) இரவு IZ 640 என்ற சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இக்குழுவுடன் 361 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர்
இஸ்ரேலுக்கு செல்லும் இந்த குழுவினருக்கான விசேட நிகழ்ச்சி இன்று காலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் இணைந்த தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்துடன் இந்த வேலையின் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருளாதாரத்தை முன்னேற்றும் அதே வேளை வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கையின் உத்தியோகபூர்வமற்ற தூதுவர்களாக இருப்பதால், நாட்டின் நற்பெயரையும் கௌரவத்தையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு இடைத்தரகர்களுக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு பணம் வழங்கப்பட்டதாக தகவல் கிடைத்தால், பணம் வழங்கப்பட்ட தொழிலாளர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர இஸ்ரேலுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |