கதிர்காமம் பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
கதிர்காம ஆலயத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 38 பவுண் தங்கத் தகடு பூசகருக்கு சொந்தமானது என்பதால் அதனை தான் எடுத்துக் கொண்டதாக இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சரணடைவு
சில நாட்களாக காணாமல் போயிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று (27) காலை 7.30 மணியளவில் சரணடைந்தார்.
ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம்
இதன்போது, சந்தேகநபரான பூசகர் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், சந்தேகநபரான பூசகர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் : புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இடர் முகாமைத்துவ நிலையம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |