ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழு, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் கலந்துரையாடல் என்று போடப்பட்டிருந்த போதிலும், சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்குவதாக நேற்று (01) அறிவித்த தீர்மானம் பாரதுரமான தவறு என ஜனாதிபதி சட்டதரணி கே.வி தவராசா (K V Thavarasa) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் (Lankasr) "ஊடறுப்பு" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டடுள்ளார்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) , சிறீதரன் (S. Shritharan) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளாத நிலையில் இந்த தீர்மானம் எடுத்து கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையான தீர்மானங்கள்
தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஒரு பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சி விலாசமற்று போகும் சூழல் இங்கு உருவாகும் எனவும் ஜனாதிபதி சட்டதரணி தெரிவித்துள்ளார்.
இது போன்ற இன்னும் பல உண்மைகளுடன் “ஊடறுப்பு” கீழ்வரும் காணெளியில்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |