காவல்துறையினரின் மிலேச்சத்தனமான செயல் - அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக விசாரணை
அதிக பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி சமூக ஊடகப் பதிவு ஒன்றை மேற்கொண்ட ஊடகவியலாளருக்கு எதிராக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது, சில சிறுவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு அதிக பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகளை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியே இந்த பதிவை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
விசாரணை அழைப்பு
இந்த ஊடகப்பதிவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
தரிந்து ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் (IGP) செய்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று காலை 09.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக கூறி அழைப்பாணை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்களின் விபரங்களை அம்பலப்படுத்துவோருக்கு அபராதம் மற்றும்
அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் காவல்துறைமா அதிபர் செயற்படுவதாகவும், அரச சொத்துக்களை காவல்துறையினர்
துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் தரிந்து ஜயவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
