அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Gold smuggling
United States of America
By Sumithiran
கட்டுநாயக்காவில் கைது
67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று தங்க பிஸ்கட்களை சுங்கத்துறைக்கு அறிவிக்காமல் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்ற ஒருவரை சுங்க அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.
இவ்வாறு கைதானவர் அமெரிக்காவில் வசிக்கும் 42 வயதான இலங்கையர் ஆவார்.

இவர் டுபாய் நோக்கிப் புறப்படும் எமிரேட்ஸ் விமானமான EK-651 இல் ஏறுவதற்காக காலை 10.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதற்கு தயாராகி கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.
சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட தங்கம்

அவர் கொண்டு வந்த சூட்கேஸில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிராம் எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி