ஜனநாயகத்தை சீர்குலைப்பதா ரணிலின் திட்டம்
Sajith Premadasa
Sri Lankan local elections 2023
By Vanan
மக்களுக்கு தங்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காவிடின் ஜனநாயகம் சீர்குலைந்துபோவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று கண்டியில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இவ்வாறு தெரிவித்த அவர், ஜனநாயகத்தை சீர்குலைக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஒத்திவைப்பு
மேலும் பேசிய அவர், “அதிபர் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தேர்தலை நடத்தாதிருப்பதே.
இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இருபத்தி இரண்டு தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளது.
நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும்,நச்சுத்தன்மையற்றதாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எத்தகைய உரிமையும் இல்லை” - என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்