வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய காத்திருந்த இலங்கையரா நீங்கள்? ஜனவரி முதல் புதிய நடைமுறை
marry
foreigners
sri lankan
new regulation
By Vanan
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உரிய விசா அனுமதிப் பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரமே அவசியமாக காணப்பட்டது.
இருப்பினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் போது, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி