தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல்?
attack
fisherman
tamilnadu
srilanka navy
By Jaso
தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கச்சதீவு,நெடுந்தீவுமற்றும் தலைமன்னா் அருகே உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையே கற்களால் தாக்கி சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் மீனவர்கள் காயமின்றி தப்பி கரை திரும்பிய நிலையில் 2 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.