தமிழக மீனவர்களிடம் நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை - இந்திய ஊடகம் தகவல்
india
fisherman
tamilnadu
By Sumithiran
தமிழகம் நாகை அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் சின்னத்தம்பி, சிவா, பெருமாள்,விவேக் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென 2 படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் படகை வழிமறித்தனர்.
பின்னர் தமிழக மீனவர்களிடம் இருந்த வோக்கிடாக்கி, ஜிபிஎஸ் கருவி, பற்றறி ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர குழும பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.