சிறிலங்கா காவல்துறையின் கனடா தேடுதல்: தமிழ் கனேடியர்கள் மீதான மிசன்?
இலங்கையில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இறுக்கமாக உள்ள நிலையில் சிறிலங்கா காவற்துறை கனேடிய காவற்துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராவற்கு அறிகுறியாக இந்த நகர்வுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதான செய்திகள் சில ஐயங்களை எழுப்புகின்றது.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக ஈழத்தமிழ் பூர்வீகத்தைசேர்ந்த கெரி ஆனந்தசங்கரி பதவிவகிக்கும் நிலையில் சிறிலங்கா காவற்துறையின் இந்த நகர்வு கனேடிய தமிழர் தரப்பு அவதானம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகவும் மாறுகிறது.
இதேபோலவே அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ரம்பின் வரியால் சவால்களுக்கு உள்ளாகிய இலங்கையின் ஆடை உற்பத்தி துறைக்கு பிரித்தானியாவும் ஒரு ஆசுவாசத்தை வழங்கிய நிலையில் இவ்வாறான நகர்வுகள் மேற்குல நாடுகளின் இரட்டைநிலைப்பாடுகளையும் பகிரங்கப்படுத்துவதாக கலலைகள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
