மோடியிடம் மண்டியிட்ட மகிந்த! 3 புள்ளிகளில் இந்திய - இலங்கை உறவு (காணொளி)
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அடைக்கலம் கோரியமை முற்றிலும் உண்மை என இந்தியாவிலிருக்கும் முன்னாள் இராணுவ வீரர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டிற்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவின் குடும்பம் தம்மை பாதுகாப்பதற்காக இந்தியாவிடம் அடைக்கலம் கோரியிருந்தது.
அதாவது இலங்கை தீவிற்கு அருகில் உள்ள நாடு இந்தியா என்பதன் காரணமாக, விரைவாக நாட்டை விட்டு வெளியேறி தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை மகிந்த ராஜபக்சவிற்கு காணப்பட்டது. இதன் காரணமாகவே இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையுடனான உறவை இந்தியா மூன்று புள்ளிகளைக் கொண்டே நகர்த்தி வருகின்றது.
அதாவது, நண்பனாக பார்க்கப்பட்ட இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் காணப்பட்டமையினால் இதனை அவதானித்த இந்தியா, இலங்கையுடனான உறவை மூன்று புள்ளிகளை கொண்டதாக காணப்பட வேண்டுமென்ற முடிவினை மேற்கொண்டு உதவிகளை செய்யத் தொடங்கியது.
அதாவது, முதலில் சீனாவை இலங்கையில் கட்டுப்படுத்துவது,வடக்கு ,கிழக்கில் நேரடி தொடர்பை வலுப்படுத்துவது, ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமை அதாவது 13 ஆம் சரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மூன்று புள்ளிகளை கொண்டே இந்திய - இலங்கை உறவு நகர்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
