சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் தீவிரமாக செயல்படும் ரணில்!
சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக செயல்பட்டுவருவதாக பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அதனையொட்டி எழுந்த இளைஞர்களின் போராட்டம் என்பவற்றுக்குக் காரணமாக இருந்தவர்கள் இப்போது மொட்டுக் கட்சியை விட்டும் விலகிச் சென்றுவிட்டார்கள்.
இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதைப் போன்றே உடனடியாக அரசியல் ஸ்திர நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதும் மிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்