பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    England
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    இலங்கை மாணவர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
கடந்த மாதம் 31 ஆம் திகதி இலங்கை மாணவன் இங்கிலாந்தில் நோட்டிங்ஹாமில் உள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த மகிழுந்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்த நிலையில் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
விபத்து இடம்பெற்ற போது 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற இலங்கை மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மகிழுந்தின் சாரதியான 27 வயதான ஜோசுவா கிரிகோரி என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 15 மணி நேரம் முன்
 
        
        ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன் 
        
        செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        