யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கொரியர் சேவை ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்ந்த 23 வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்படும் போது 11 சட்டவிரோத போதைமாத்திரைகள் மற்றும் 45 மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, குறித்த சந்தேகநபர் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, கடந்த (11) ஆம் திகதியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்