இலங்கைத்தமிழர் நலன் ஆலோசனைக்குழு - தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அரசாணை
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை நியமித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்(Stalin).
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்(Mastan) தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி(Veerasamy) நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின்(Cowie Lenin), வழக்கறிஞர் மனு(manu), உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஈழத்தமிழர்கள் மீது அதீத அக்கறையும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமும் காட்டிவரக் கூடிய கனிமொழி (kanimozhi)எம்.பி.க்கு இந்த குழுவில் இடம் தராதது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஈழத்தமிழர்கள் வட்டத்திலும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.