ஈழத்தமிழர்களை கேடயமாக பயன்படுத்தும் நாடுகள்!
ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் ஈழத்தமிழர்களை தமது நாட்டின் நலன் சார்ந்து பயன்படுத்துவதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், கனடாவிலுள்ள ஈழத்தமிழர்களை ஆபத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் கடந்த சனிக்கிழமை(12) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலுக்கும் கனடாவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு தெரியாமல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்தியா தொடர்பிலான பல ஆதாரங்களை அமெரிக்கா வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஈழத்தமிழர்களின் ஆபத்து நிலை தொடர்பிலும் புலனாய்வு தகவல்கள் குறித்தும் ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |