கனடா பொதுத் தேர்தலில் இலங்கைத்தமிழர் பெரு வெற்றி
canada
election
victory
srilankan tamil
By Sumithiran
கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத்தமிழரான ஹரி ஆனந்த சங்கரி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி 16051 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary யை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
Scarborough—Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்த சங்கரி போட்டியிட்டார். அவர் மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary 8059 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
இதேவேளை அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கம்ஷாயினி குணரட்ணம் என்பவர் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.